சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் மற்றும் கோயம்பேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனிடையே தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இதனால் 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், இராமேஸ்வரத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.