குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக தங்கள் நாட்டு தடகள வீரர்களை தென் கொரியாவுக்கு அனுப்ப வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது.

தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடங்குகிறது. இதில் வடகொரியாவும் பங்கேற்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த தென்கொரியா, கடந்த 2 ஆண்டுகளாக அந்நாட்டுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியது. இந்த நிலையில் கடைசி கட்ட பேச்சுவார்த்தையானது, இருநாடுகளின் எல்லையில் உள்ள பன்முன்ஜோம் என்ற பகுதியில் நடைபெற்றது. இதில் வடகொரியா சார்பில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பங்கேற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில், தங்கள் நாட்டு தடகள வீரர்களை குளிர்கால ஒலிம்பிக்கிற்காக, தென்கொரியாவுக்கு அனுப்புவதென வடகொரியா முடிவு செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *