ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அடுத்த மாதம் உலக ஹாக்கி லீக் பைனல் தொடர் நடைபெறுகிறது. இந்த ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மன்பிரீத் சிங் தலைமையிலான 18பேர் கொண்ட இந்திய அணியில் முன்னாள் கேப்டனும், கேல் ரத்னா விருது பெற்ற மூத்த நடுகள வீரர் சர்தார் சிங் நீக்கப்பட்டுள்ளார். உடல் தகுதி பெற்ற ருபிந்தர் பால் சிங், பிரேந்திர லக்ரா ஆகியோர் மீண்டும் அணிக்கு தேர்வாகியுள்ளனர்.
2017-11-18