இந்தியா இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இந்தியா இலங்கை அணிகள் இடையேயான 3 ஒருநாள் தொடரில் முதல் ஆட்டம் இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியை இந்திய அணி வென்றால், ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *