நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா – விசாகன் திருமணம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா – விசாகன் திருமணம்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா – விசாகன் திருமணம் சென்னையில் நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ், உறவினர்களான, கஸ்தூரி ராஜா, செல்வ ராகவன், இசை அமைப்பாளர் அனிருத், ஆகியோரும் திருமணத்தில் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கமல்ஹாசன், வைகோ, மு.க.அழகிரி, போன்ற அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பி.வாசு, பிரபு, உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர். தனது மகனுடன் செளந்தர்யா, விசாகனை கரம்பிடித்து வலம் வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *