தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சென்னை ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, வடபழனி, அரும்பாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களில் காலையில் மிதமான மழை பெய்தது.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, ஏற்பாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் காலை நேரத்தில் இதமான சூழல் நிலவியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பண்ணந்தூர், புலியூர் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் சாலைகளில் குடைப்பிடித்த படி சென்றனர்.