காஞ்சி ஜெயேந்திரர் மறைவுக்கு கி.வீரமணி இரங்கல்!

காஞ்சிபுரம் சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், ஜெயேந்திரர் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

காஞ்சி சங்கரமடத்து மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை தனது 83ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

அவருடனும், அவரது மடத்துடனும் திராவிடர் கழகத்திற்கு எவ்வளவு மலையளவு கருத்து கொள்கை வேறுபாடுகள் இருப்பினும் – திராவிடர் கழகம் அவரது மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*