ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக வழக்கு ; சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை….

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்துள்ளார்.

தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசு கொறடா ராஜேந்திரனின் உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேரும் செயல்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தும், சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சக்கரபாணி தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *