இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில், நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் ஓவர்’. இந்த படத்தில் வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடிகை டாப்ஸி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தை தணிக்கை செய்த தணிக்கை துறையினர் படத்திற்கு “யூ/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்த படம் வருகின்ற ஜூன் 14ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-05-26