வடகொரியா ரகசியமாக 13 அணு ஆயுத சோதனை மையங்களை செயல்படுத்தி வருவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அணு ஆயுத சோதனைகளை நிறுத்திக் கொள்ள வடகொரியா ஒப்புக்கொண்டதையடுத்து கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரின் செண்டோசா தீவில் அமரிக்க அதிபர் டிரம்ப் – வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வடகொரியா தொடர்பான ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தாங்கள் வடகொரியாவின் பல்வேறு இடங்களில் இதுவரை 13 ரகசிய அணு ஆயுத சோதனை மையங்களை கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அவை தரைக்கீழ்த் தளங்கள், குகைகள், குறுகிய மலைப் பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட இடங்களில் செயல்படுவதாகவும், அங்கு இன்னும் அணு ஆயுத சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.