ரஷ்யாவில் போர் விமானம் தரையிறங்கும் போது இரண்டாக உடைந்து ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
வடக்கு ஆர்டிக் பகுதியில் உள்ள மர்மன்ஸ்க் ((MurmansK)) என்ற இடத்தில் விமானப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு டபோலவ் டியு 22M3 ((Tupolev Tu22M3)) என்ற குண்டு வீசும் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
இந்தப் பகுதியில் வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு இருந்ததால் பயிற்சியை பாதியில் முடித்துக் கொண்ட விமானப்படை வீரர்கள் முகாமுக்குத் திரும்பினர்.
குறிப்பிட்ட விமானம் தரையிறங்கும் போது, பனியில் வழுக்கி விமானம் இருதுண்டுகளாக உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட மூவர் உயிரிழந்தனர்.