சாலைப் போக்குவரத்துக்கு நடுவே 4 சிங்கங்கள் கம்பீர பவனி

தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பான சாலைப் போக்குவரத்துக்கு நடுவே 4 சிங்கங்கள் கம்பீரமாக நடந்து செல்லும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் உள்ள க்ரூகெர் தேசிய வனவிலங்குப் பூங்காவை ஒட்டிய சாலையில் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்த வாகனங்களை சிங்கங்கள் குறுக்கிட்டன.

4 சிங்கங்கள் கம்பீர பவனி வரும்நிலையில் அவற்றை வாகனங்கள் மிக மெதுவாக பின் தொடரும் காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

அந்த வழியாகச் சென்றவர்களால் எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *