எத்தியோப்பியாவிலிருந்து கென்யா புறப்பட்ட விமானம் விபத்து – பயணித்த 157 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

எத்தியோபியாவில் இருந்து 157 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்துள்ளது.

எத்தியோபிய தலைநகர் அட்டிஸ் அபாபாவில் இருந்து எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 மேக்ஸ் ரக விமானம் இன்று காலை  கென்ய தலைநகர் நைரோபிக்குப் புறப்பட்டது. ET 302 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் 149 பயணிகளும், 8 விமானப் பணிக்குழுவினரும் இருந்தனர்.

இந்நிலையில் புறப்பட்ட 6 நிமிடங்களுக்குள்ளாகவே அதாவது அந்நாட்டு நேரப்பட்டி காலை 8 மணி 44 நிமிடங்களுக்கு விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்ததாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

விமானம் எந்த இடத்தில் விழுந்தது என்று தேடி, மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்தவர்களின் நிலை இதுவரை அறியப்படவில்லை. இருந்தபோதும், எத்தியோபியா பிரதமர் அபிய் அஹ்மத் ((Abiy Ahmed)) விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அந்நாட்டு மக்கள் சார்பிலும், அரசின் சார்பிலும் இரங்கல் தெரிவிப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *