ஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் வரும் 29-ஆம் தேதி மீண்டும் பதவியேற்பு

147 இடங்களைக் கொண்ட ஒரிசா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதளம் கட்சி 112 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து நவீன் பட்நாயக் வரும் 29-ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒடிசா முதலமைச்சராக முதன் முறையாக கடந்த 2000-ஆவது ஆண்டில் பதவியேற்ற நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சி அதன் பிறகு அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் நிலையில் நவீன் பட்நாயக் தற்போது தொடர்ந்து 5-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *