அதிகாரம் மற்றும் பண பலத்தால், தான் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தேர்தலில் தன் தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி என்றும் அதிகாரம் மற்றும் பண பலத்தால், தான் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதக்கு பிரதமர் மோடியே காரணம் என கூறிய அவர், வாரணாசியில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததால் தான் அவரது மகன் வெற்றி பெற்றார் என்று தெரிவித்தார். மேலும் ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாகவும் ஈ வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.