17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா, 0-3 என அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது.

17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நேற்று தொடங்கியது. டெல்லி ஜவர்ஹலால் நேரு மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதின. வலுவான அமெரிக்க அணிக்கு இந்திய வீரர்கள் கடும் சவால் கொடுக்கும் வகையில் விளையாடினார்கள். முதல் 30 நிமிடம் வரை இந்திய வீரர்கள் கோல் ஏதும் வாங்காத நிலையில் இருந்தனர். 30-வது நிமிடத்தில் அமெரிக்காவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அமெரிக்காவின் சர்ஜென்ட் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அமெரிக்கா 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் தர்கின் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் அமெரிக்கா 2-0 என முன்னிலைப் பெற்றது. இந்திய வீரர்கள் பதில் கோல் அடிப்பதற்கு முயற்சி எடுத்தனர். பல வாய்ப்புகள் கிடைத்தும் அது கோலாக மாறமுடியாமல் போனது. அதன்பின் 84-வது நிமிடத்தில் கார்லெடன் மேலும் ஒரு கோல் அடிக்க அமெரிக்கா 3-0 என வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *