மியான்மரில் நீடித்து வரும் வன்முறை காரணமாக லட்சக்கணக்கான ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தங்க பாதுகாப்பான இடமும், உண்ண உணவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என தன்னார்வ அமைப்புகள் வருத்தம் தெரிவித்துள்ளன. அத்துடன் காக்ஸ் பசார் அகதிகள் முகாம்களில் மட்டும், போதிய உணவு கிடைக்காத காரணத்தினால், ஏராளமான குழந்தைகள் மெலிந்து காணப்படுகின்றனர். அவர்களது பசியை போக்க முடியாமல் தாய்மார்களும் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். இந்த சூழலில் அங்குள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் வசிக்கும் 90 சதவிகிதம் பேருக்கு ஒருவேளை உணவு மட்டுமே கிடைத்து வருவதாக ஐ.நா.வின் குழந்தைகள் நல முகமையான யூனிசெப்ஃ உறுதிப்படுத்தியுள்ளது.
2017-10-10