மு.க அழகிரி தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணியில் கலந்துகொண்டுள்ள அவரது ஆதரவாளர்கள் பெரிய பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அதில் கரங்கள் கோர்ப்போம், கழகம் காப்போம் என்று எழுதப்பட்டுள்ளது.
பேரணியின் முடிவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அழகிரி அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.
மு.க அழகிரி தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணிக்காக சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கறுப்புச் சட்டை அணிந்து மு.க அழகிரி அமைதிப் பேரணி தொடங்கும் திருவல்லிக்கேணி பகுதிக்கு வந்தார். அவரின் மகன் துரை தயாநிதி அழகிரியும் உடன் உள்ளார். இதைத்தொடர்ந்து அமைதிப் பேரணி தொடங்கியது.