ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது. முதலாவது ஒரு நாள் போட்டி, வரும் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக, ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 347 ரன்களை ஆஸ்திரேலியா குவித்தது.
கடினமான இலக்கை எதிர்கொண்ட லெவன் அணி ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை இழந்து வந்தது. 48.2 ஓவர்களில் பிசிசிஐ தலைவர் லெவன் அணி 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.