காலத்தின் கட்டாயம் இருந்தால் விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஏற்கனவே திரை உலகில் இணைந்து பயணித்துள்ளதாகவும் கூறினார். உள்ளாட்சி தேர்தல் அவசியமான ஒன்று என்றும் விரைவில் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.