“ஈ, கொசுக்களை ஒழிக்க ஒரு கோடி” – அமைச்சர் விஜயபாஸ்கர்

“ஈ, கொசுக்களை ஒழிக்க ஒரு கோடி” – அமைச்சர் விஜயபாஸ்கர்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஈ, கொசுக்களை ஒழிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.கஜா புயலின் தாக்கத்தால் இதுவரை தமிழகத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். கடலோர மாவட்டங்களில் உள்ள ஏராளமான தென்னை, வாழை உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

கஜா புயலின் நிவாரணத்திற்காக முதலமைச்சர் பழனிச்சாமி ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் 1500 கோடி ரூபாய் மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரியுள்ளார்.

இந்நிலையில், கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஈ, கொசுக்களை ஒழிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் புகையடிப்பான்கள் மூலம் புகை அடிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 5,166 மருத்துவ முகாம்கள் மூலம் 3,27,444 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *