இலவசப் பொருட்களை வைத்து கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு!

இலவசப் பொருட்களை வைத்து கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு!

சர்கார் திரைப்படத்தின் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சியின் போதுவெட்டப்பட்ட கேக்கில் இலவசப் பொருட்கள்போன்ற மினியேச்சர்கள்

இடம்பெற்றுள்ளன

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவசப் பொருட்களை உடைத்து தீயிட்டு கொளுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இக்காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் தோன்றிய அக்காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது. மேலும் சில ஒலிக்குறிப்புகளும் மியூட் செய்யப்பட்டன.

இந்நிலையில் திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் ஊள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இசையமைப்பாளர் ரகுமான் தமது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

 இதில் வெட்டப்படும் கேக் ஒன்றில் அரசு வழங்கிய இலவசப் பொருட்களான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றைப் போன்ற சிறிய உருவங்கள் இடம் பெற்றுள்ளன.  இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. திரையரங்குக்கு வரும் மக்களின் பாதுகாப்பு கருதியே சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக படக்குழு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *