இந்தி திணிப்பை தமிழகம் ஏற்காது. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA

கஸ்தூரிரங்கன் தலைமையிலான  குழுவின் பரிந்துரைப்படி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக் ரியா புதிய கல்வி கொள்கையை வெளியிட்டுள்ளார். இந்த  புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி விட்டிருக்கிறது. அதன்படி  நாடு முழுவதும் நடுநிலை வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வருகிறது.

அதேபோல் இந்தி மொழி கட்டாயம் இல்லாத மாநிலங்களிலும் இனி கட்டாய பாடம் ஆகிறது இந்தி. இச்செய்தி  தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.  விரும்பாத மக்கள் மீது குறிப்பிட்ட ஒரு மொழியை வலிந்து   திணிப்பது சரியல்லஎன்றும்  புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மொழித் திணிப்பை உருவாக்கும்  மத்திய  பாஜக அரசின் செயலை   மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. இன்று அனைத்தும்  உலகமயமாக்கப்பட்டு வரும் நிலையில் பல மொழிகளை கற்பதில் தவறில்லை. இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன், மான்டரீன், ஸ்பானிஷ், அரபி என பிற மொழிகளை தமிழக மக்கள் தன்னார்வத்துடன்  கற்பதை வரவேற்கிறோம். ஆனால், இதை சட்டப்பூர்வமாக்குது தான் கிளர்ச்சிகள் உருவாகிறது.

ஒரு மாநில மக்கள் அதை மொழி ஆக்ரமிப்பாக  கருதும் போது, மத்திu அரசு , தன் பலத்தோடு அதை திணிக்க நினைப்பது முறையல்ல. தமிழகத்தில் இரு மொழி கொள்கையே பின்பற்றப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. திரு .செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இது ஆறுதல் அளிக்கிறது.

இவ்விஷயத்தில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். தமிழக மக்களின் மனநிலைக்கு எதிராக இருமொழி கொள்கை விஷயத்தில் மாற்றங்களை செய்ய முற்பட வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்திக் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *