நியூயார்க்கில் இருந்த டிவின் டவர் கோபுரம் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அல்கய்தா தீவிரவாதிகள் விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நிகழ்ந்த 16வது ஆண்டு நினைவு நாள் அமெரிக்காவில் கடைபிடிக்கப்பட்டது. தாக்குதல் நிகழ்ந்த போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்த அமெரிக்க வீரர் ஃபிராங் கல்பர்ட்சன், வானில் புகை எழுவதை சாட்டிலைட் புகைப்படம் மூலம் பார்த்துள்ளார். நியூயார்க் என தெரிய வந்ததை அடுத்து கேமரா மூலம் வானில் இருந்த படி அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களை தற்போது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது.