சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தற்போது அரசியல்வாதிகள் மீது நம்பகத்தன்மை குறைந்துவிட்டது என்று கூறினார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலாவே விடியோ எடுத்தார் என்றும் சிகிச்சை காரணமாக எடை குறைந்து, நைட்டி உடையில் இருந்ததால் அதை வெளியிடவில்லை என்றும் தினகரன் விளக்கமளித்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையின்போது உரிய நேரத்தில் அந்த விடியோவை சமர்ப்பிப்போம் என்று தெரிவித்த டிடிவி தினகரன், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ., இன்டர்போல் என யார் வேண்டுமானாலும் விசாரிக்கட்டும் என்று கூறினார்.
2017-09-26