சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாலச்சந்திரன், தெற்கு கர்நாடகா மற்றும் வட தமிழகத்தினை ஒட்டியுள்ள பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காணப்படுவதாக தெரிவித்தார். மேலும், தெற்கு ஆந்திரா முதல் தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார். தென்மேற்குப் பருவ மழை இன்னும் வடமாநிலங்களை விட்டு முழுமையாக அகலாததால், வடகிழக்கு பருவமழை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகப்படியாக காவேரிப்பாக்கதில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
2017-10-07