நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப ரஷ்யா திட்டம்: அதிபர் புதின்

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டு வருவதாக, அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தை சேர்ந்த விண்வெளி வீரர் யூரி ககாரின், விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் மனிதர் ஆவார். 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியன்று, விண்கலத்தின் மூலம் யூரி ககாரின் விண்வெளிக்கு அனுப்பப்பட்டார். அதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12ஆம் தேதி விண்வெளி வீரர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாஸ்கோவில் நிகழ்ச்சி ஒன்றில், விண்வெளித்துறை வல்லுநர்கள் மத்தியில் பேசிய அதிபர் புதின், நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

முதலில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றும், அதன் பிறகு நிலவிற்கு ஆய்வுக்கலங்கள் அனுப்பப்படும் என்றும் புதின் கூறினார். நிலவு திட்டத்திற்காக சூப்பர்ஹெவி ராக்கெட் தயாரிக்கும் பணி தொடங்கியிருப்பதாகவும் புதின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *