கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 52 அடி உயரத்தில், அணை கட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை இந்த அணை பூர்த்தி செய்கிறது. கர்நாடகாவில் மழை பெய்து வருவதாலும், கெலவரப்பள்ளி அணை திறந்துவிடப்பட்டிருப்பதாலும், கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது. இந்நிலையில், அணையின் முதல் மதகு உடைந்து தண்ணீர் வேகமாக் வெளியேறி வருகிறது. இதனையடுத்து தகவலறிந்து காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், அங்கு விரைந்தனர். மேலும் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் அணையை பார்வையிட்டு, தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுக்கும் தண்ணீர் காரணமாக, கரையோரம் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.
2017-11-30