கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை தடுக்க கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், கவின் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு எதிராக நடைபெறும் ஒடுக்குமுறைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம், சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் தற்கொலை விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது பாமகவினர் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் ஆனந்தன் தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.