குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றவுடன், 10 நாட்களுக்குள் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் துணை தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதி ஆகிய தினங்களில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநிலம் முழுவதும் பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையைல் அம்ரேலி பகுதியில் பிரசாரம் செய்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். மேலும் ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் விவசாய கடன் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் கூறினார். பிரதமர் மோடி மகா நடிகர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.