நெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி
படுகொலை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்!!
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியில் வசித்து வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஏற்கெனவே அசோக் மற்றும் அவரது தாயார் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அசோகின் தாயார் வைத்திருந்து புல்லுக்கட்டு அப்பகுதியில் இருந்து மற்றொரு சமுகத்தை சேர்ந்தவர் மீது உரசியதால் ஏற்பட்ட பிரச்சினையில் அசோகின் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மர்ம நபர்களால் அசோக் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்பது சாதி ஆதிக்க வெறியர்களால் நடைபெற்றதாகவே அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாதியின் அடிப்படையில் கொலை நடைபெற்றிருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது. எனவே இந்த கொலையில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை உடனே கைதுச் செய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகளைத் தடுக்க சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், படுகொலை செய்யப்பட்ட அசோக் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.