கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளை அடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களை வகைப்படுத்த தனி வார்டுகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பீதி அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவரீதியாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில் அவர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் அவரது தொண்டையில் இருந்து மாதிரிகள் சேகரிகப்பட்டு மணிப்பாலில் உள்ள கிருமியியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பத்தனம் திட்டா மாவட்டத்தில் காய்ச்சலுடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 215 பேரை தனிவார்டுகளில் அனுமதித்து வகைப்படுத்தி பிரித்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.