இந்திய- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெறுகிறது.
ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், இரு அணிகளும் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டம் இன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
டி20 தொடரை வென்ற நம்பிக்கையில், ஒரு நாள் தொடரையும் கைப்பற்ற ஆஸ்திரேலியா தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், டி20 தொடரை இழந்த இந்தியா ஒரு நாள் தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி, பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.