இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லி பெரோஷா மைதானத்தில் இன்று நடக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது.
இந்திய அணியில் ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கேப்டன் கோலி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்புடன் இரு அணிகளும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.