மீனவர் பிரச்சினை மற்றும் கடற்பாதுகாப்பு குறித்து இலங்கை இந்திய கடற்படை மாநாட்டில் தீர்மானம் நிறைவெற்றப்பட்டது.
இந்திய இலங்கை கடற்படைகளிடையே 30 ஆவது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கையின் ‘சயூரல’ கப்பலில் நடைபெற்றது. இலங்கை கடற்படையின் வடக்கு தளபதி ரியர் எட்மிரால் மோரில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இலங்கை மற்றும் இந்திய கடற்படையின் பல்வேறு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து பேசப்பட்டது. மீனவர்களின் பிரச்சினையை தீர்க்கவும் எல்லை தாண்டுவத்தை தடுக்கவும் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்த தீர்மானிக்கப்பட்டது.