ஜப்பான் நாட்டின் மன்னர் அகிஹிட்டோ வயது மூப்பு காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்து பதவி விலகியதை அடுத்து, புதிய மன்னராக அவர் மகன் நருஹிட்டோ இன்று பதவியேற்றார்
மன்னர் பதவி விலக விரும்புவதாகவும் அரச குடும்பத்தில் இதற்கான ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து புதிய மன்னர் முடிசூட்டும் விழாவுக்கான ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன. இன்று டோக்கியோ இம்பீரியல் அரண்மனையில் 126வது ஜப்பான் மன்னராக நருஹிட்டோ சம்பிரதாயப்படி பதவியேற்றார்.
புதிய மன்னர் பதவியேற்பை முன்னிட்டு அந்நாட்டில் பத்து நாட்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.