சமூக வலைதளங்களில் ‘ட்ராஷ் டேக்’ எனும் சேலஞ்ச் நெட்டிசன்களிடையே அதிக கவனத்தை ஏற்படுத்திவருகிறது. ஐஸ் பக்கெட் சேலஞ்ச், டென் இயர்ஸ் சேலஞ்ச் வரிசையில் புதிதாக இடம்பிடித்துள்ள இந்த ட்ராஷ் டேக் சேலஞ்சில், குப்பைகள் நிறைந்த பகுதியில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், பின்னர் அந்த குப்பைகளை தாங்களே சுத்தம் செய்த பின் எடுத்த புகைப்படங்களையும் ஒன்றாக இணைத்து நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர்.
வெளிநாடுகளில் துவங்கிய இந்த சேலஞ்சானது, தற்போது இந்திய நெட்டிசன்களிடையேயும் ஆக்கிரமித்துள்ளது. தூய்மையை மையப்படுத்தி அமைந்திருப்பதால் இந்த சேலஞ்சுக்கு வரவேற்பும் பெருகிவருகிறது.