இமயமலையிலிருந்து 5000 கிலோ குப்பை கழிவுகளை நேபாள ராணுவம் அகற்றியுள்ளது. இமயமலை பகுதியில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றும் முயற்சியில் கடந்த மாதம் 14ம் தேதி முதல் நேபாள ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
45 நாட்களில் 10,000 கிலோ குப்பைகளை அகற்ற நேபாள அரசு இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், தற்போது 5,000 கிலோ குப்பைகளை அகற்றியுள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை பொது இயக்குனர் தண்டு ராஜ் கிமைர் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மனித உடல்கள், சுற்றுலா பயணிகள் விட்டு சென்ற கூடாரம், காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள், பீர் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த கழிவுகள், உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5ம் தேதி, காத்மண்டுவில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு, பின்னர் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளது.