தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உள்பட 10 மாநில அதிகாரிகளுடன் நடத்த இருந்த ஆலோசனை ரத்து செய்யப்பட்டது.
புதுடெல்லி,
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உள்பட 10 மாநில அதிகாரிகளுடன் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த இருந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்கு எண்ணும் பணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.