கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க கவனம் செலுத்தப்படும் என்று பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி உறுதியளித்தார். கிருஷ்ணா, கோதாவரி ஆறுகள் காவிரியுடன் இணைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த முறை மத்திய அரசு நெடுஞ்சாலைப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததைப் போன்று, இந்தமுறை நதிநீர் பிரச்சனையில் கவனம் செலுத்தும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார். இந்நிலையில் கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் தண்ணீர் தேவையை கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் பூர்த்தி செய்யும் என்பதால் இந்த திட்டம் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.