நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் விமான நிலையங்களைப் போல உயர் பாதுகாப்புடனான நுழைவு அமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. ரயில் நிலையங்களுக்குள் எளிதில் நுழையும் வகையில் உள்ள பல்வேறு வழிகள் அடைக்கப்பட்டு உயர் பாதுகாப்புச் சுவர்கள் எழுப்பபடவுள்ளன.
சோதனைகளுடன் கூடிய பாதுகாப்பு நுழைவுகள் வழியாக மட்டுமே பயணிகள் ரயில் நிலையங்களுக்குள் செல்லவோ வெளியேறவோ முடியும். இதற்காக ஸ்கேனிங் எந்திரங்கள் மேம்படுத்தப்பட்டு, பயிற்சி பெற்ற ஆர்.பி.எஃப். காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.எஃப். இயக்குநர், ரயில் நிலையங்களில் நுழைய வாய்ப்புள்ள பல்வேறு வழிகள் மூலம் ரயில் நிலையங்களில் தேவையற்ற நபர்கள் மற்றும் தீவிரவாதிகளின் நுழைவு எளிதாவதாகவும், புதிய நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பு பலப்படும் என்றும் தெரிவித்தார்.