மும்பை ரயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த விரைவு ரயில் ஒன்றிலிருந்து, வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
மும்பை ரயில்நிலையத்தின் கர்லா முனையத்திற்கு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து ஷாலிமர் விரைவு ரயில் வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் துப்புரவு பணியாளர்கள் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்த போது, பொட்டலம் ஒன்று கிடந்துள்ளது.
அதனை பிரித்து பார்த்த போது வெடிபொருட்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனால் பரபரப்பான சூழல் உருவானதை அடுத்து அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
அந்த பொட்டலத்தில், சில ஜெலட்டின் குச்சிகள், வெடிமருந்து, வயர், பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாகவும், ஒரு துண்டு சீட்டில் மிரட்டல் செய்தியும் இருந்தது.
அந்த சீட்டில் தங்களால் என்ன செய்யும் முடியும் என்பதை பாஜகவினருக்கு காட்ட வேண்டும் என எழுதப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.