மது தீமையை முற்றிலும் தடை செய்யக் கோரியும், அரசு டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்வதை கைவிடக் கோரியும் தொடர் அறப்போராட்டங்கள் நிகழ்த்தி வரும் சகோதரி நந்தினி மற்றும் அவர் தந்தையார் திரு. ஆனந்த் ஆகியோரை 2014ல் புனையப்பட்ட வழக்கை காரணம் காட்டி கைது செய்து இருக்கும் தமிழக அரசை கண்டிக்கிறோம்
2014ல் மது ஒழிப்பு கோரி நடந்த டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் போது காவல்துறையினரை தாக்கியதாக போடப்பட்ட பொய் வழக்கு திருப்பத்தூர்(சிவகங்கை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
குறுக்கு விசாரணையின் போது டாஸ்மாக்கில் விற்பனை செய்வது போதை பொருளா?உணவு பொருளா? இல்லை மருந்து பொருளா?
இந்திய தண்டனை சட்டம் 328ன் படி டாஸ்மாக் மூலம் போதை பொருள் விற்பது குற்றமில்லையா? என நியாயத்தின் வழிநின்று சட்டப்படி வாதாடியதற்காக ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தில்மது ஒழிப்பு போராளி சகோதரி நந்தினி மற்றும் அவரின் தந்தையார் ஆனந்தன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விரைவில் திருமணம் ஆக நிலையில் கைது செய்யப்பட்டுள்ள நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்த ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.