போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.
இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேவை மனப்பான்மையுடன் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.