பங்களாதேஷில் பெண் பத்திரிகையாளர் வீடு புகுந்து அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்களாதேஷை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சுபர்ணா நொடி. வயது 32. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வீட்டில் மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். சுபர்ணா நொடிக்கு திருமணமாகி 9 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது மகளுடன் தனி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தக் கொடூர கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.
முன்னதாக மர்ம கும்பல் சுபர்ணாவின் வீடு முன்பு கிட்டத்தட்ட 10 லிருந்து 12 முறை மோட்டார் சைக்கிள் மூலம் ரவுண்ட் அடித்திருக்கின்றது. யாரும் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் அதன்பின் சுபர்ணாவின் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். யாரென்று பார்ப்பதற்காக சுபர்ணாவும் கதவை திறந்துள்ளார். அந்த நேரத்தில் கூர்மையான ஆயுதங்களை கொண்டு இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சுபர்ணாவை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் கொலையாளிகளை பிடிக்க சிறப்பு படை அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.