சென்னை: அரசு ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். தமிழகத்தில் கோவில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சில கல்லூரிகளில் ஆடைக்கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது,
துப்பாட்டா அவசியம் பெண் அரசு ஊழியர்கள் சேலை, சுடிதார், சல்வார் கமிஸ் ஆகிய உடைகளை மட்டும்தான் அணிய வேண்டும். சேலையை தவிர மற்ற ஆடைகளை அணியும் போது கண்டிப்பாக துப்பட்டா அணிய வேண்டும்.
துப்பட்டா அவசியம் பெண் அரசு ஊழியர்கள் சேலை, சுடிதார், சல்வார் கமிஸ் ஆகிய உடைகளை மட்டும்தான் அணிய வேண்டும். சேலையை தவிர மற்ற ஆடைகளை அணியும் போது கண்டிப்பாக துப்பட்டா அணிய வேண்டும்.
அடிக்கும் நிறம் கூடாது அதேபோல் அவர்கள் உடுத்தும் ஆடையின் நிறம் மெல்லிய நிறத்தில், அதாவது, லைட் கலரில் இருக்க வேண்டும். அடிக்கும் கலரில் கண்கள் கூசும்படி இருக்கக்கூடாதாம்.
டிசர்ட் கூடாது ஆண் அரசு ஊழியர்களும் பணியாளர்களும் பேண்ட் மற்றும் சட்டைதான் உடுத்த வேண்டுமாம். டீ-சர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி ஆஜராக வேண்டும்? துறை சார்ந்த வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் அரசு ஊழியர்கள் ஆஜராகும்போதும் அரசு ஊழியர்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி துறை சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆஜராகும்போது ஆண் ஊழியர்கள் முழுக்கை சட்டை அணிந்து அதன் மீது கோட் போட்டு கொண்டுதான் போக வேண்டும். ஆண் ஊழியர்களும் லைட் கலர் ஆடைகளைதான் அணி வேண்டும்.
லைட் கலர் துப்பட்டா இதேபோல் பெண் ஊழியர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லும் போது, சேலை அல்லது சல்வார் கமீஸ் அல்லது சுடிதார் அணிந்து செல்ல வேண்டும். சேலை தவிர மற்ற உடையுடன் மெல்லிய நிற துப்பட்டாவையும் அவசியம் அணிந்திருக்க வேண்டும் இவ்வாறு கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.