தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கிரானைட் குவாரிகளையும் படிப்படியாக மூட உத்தரவிட்டுள்ளது. ஒரு சிலரின் நலனுக்காக பலரின் நலனை கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது என்று கூறியுள்ள நீதிபதி, ஜல்லிக்காக மட்டுமே குவாரிகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். ஜல்லிக் குவாரிகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கிரானைட் குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கவும் தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
2017-11-30