டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் மாதிரியை உருவாக்கிய சிறுவனுக்கு, அதே நிலையத்தில் பிறந்தநாளை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
டெல்லியை சேர்ந்த 9 வயது சிறுவன் அபீர் மாகூ, உருவாக்கிய டெல்லி விமான நிலையத்தின் மாதிரியை, அவரது உறவினர் டுவிட்டரில் பதிவிட்டு, டெல்லி விமான நிலையத்தையும் டேக் செய்திருந்தார். அதனுடன் விமானங்கள் வந்து செல்லும் நேரத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்வையிட்ட பலரும் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், சிறுவனின் இந்த செயலை பாராட்டிய டெல்லி விமான நிலையத்தின் தலைமை இயக்குனர் விதே குமார் ஜெய்பூரியர், வருகிற 10ம் தேதி பிறந்த நாளை கொண்டாடும் அபீர் மாகூ, நிலையத்தை சுற்றிப்பார்க்கவும், பிறந்தநாளை கொண்டாடவும் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளார்.