சென்னை கொட்டிவாக்கத்தில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் தயாரித்து விற்பனை செய்து வந்த நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கொட்டிவாக்கம் செந்தாமரைக்கண்ணன் தெருவில் ஓம்.எஸ்.ஆர்.கே.வி.பி அக்வா (om srk, vb aqua) என்ற நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் மூலம் சட்டவிரோதமாக தண்ணீரை உறிஞ்சி கேன்களில் விற்பனை செய்வதாகவும், இவ்வாறு விற்பனை செய்யப்படும் நீர் சுகாதாரமற்று இருப்பதாகவும் புகார் எழுந்தது.
அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்நிறுவனத்தின் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர்.