கடந்த ஐந்தாம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் மறைந்த நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு உமர் பாரூக் அவர்கள் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் அவர்கள்,மாமன்னர் ராஜராஜ சோழன் குறித்து கூறிய கருத்துக்கள் ஏற்புடையதா?அல்லது ஏற்புடையது அல்லதா? என்பதைக் குறித்த விவாதங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். கருத்தியலாக ஒரு திரைப்பட இயக்குனர்,ஒரு கருத்தை முன் வைக்கும் போது, ஒன்று அதைக் குறித்து ஆரோக்கியமாக ஒரு சமூகம் விவாதிக்க வேண்டும். இல்லையேல் கடந்து செல்ல வேண்டும்.
அது விவாதத்திற்கு உட்பட்டது என்றால்,நாம் ஏன் இதற்கு முன்னால் மாமன்னர் ராஜராஜனை கடுமையாக விமர்சித்த,ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கரோஷிமா, நா.வானமாமலை,க.கைலாசபதி போன்றோரை விமர்சிக்கவில்லை?கவனமாக கடந்து விட்டோம்.
இன்னும் கூடுதலாக திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் என்ற போர்வையில், சுபவீ அவர்களும், வே.மதிமாறன் அவர்களும், இன்னுமிருக்கும் திராவிட குஞ்சுகளும்…அவ்வப்போது மாமன்னர் ராஜராஜ சோழன் மீது நஞ்சை தூவும் போதெல்லாம்…நாமெல்லாம் ஏன் அமைதி காத்தோம்? என்ற அடுத்த கேள்வி பிறக்கிறது என்று களஞ்சியம் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.